தமிழ் சினிமாவை கலக்கிய திருட்டுப்பயலே புகழ் நடிகர் ஜீவனா இது? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகர் ஜீவன் ஒருகட்டத்தில் தமிழில் பெரிய நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான யுனிவர்சிட்டி படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். அந்தப் படத்தில் விவேக்கின் காமெடி காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டன.

இதேபோல் தொடர்ந்து ஜீவன் சூர்யா, ஜோதிகா சேர்ந்து நடித்த காக்க காக்க படத்திலும் வில்லனாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு மிகவும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த திருட்டுப் பயலே படமும் மெகா ஹிட் ஆனது.. நான் அவனில்லை படத்தில் பெண்களை ஏமாற்றும் கேரக்டரில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஜீவன். கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு, அதிபர் என்னும் படத்தில் ஜீவன் நடித்திருந்தார்.

தொடர்ந்து மார்க்கெட்டை இழந்த ஜீவன் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது 6 ஆண்டு இடைவெளிக்குப் பின்பு அசிரீரி என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் ஜிகே இப்படத்தை இயக்குகிறார், அறிவியலை மையக்கருவாகக் கொண்டு இப்படம் எடுக்கப்படுகிறது. இப்படம் ஜீவனுக்கு மீண்டும் கோடம்பாக்கத்தில் கம்பேக் கொடுக்குமா என்பது போக, போகத்தான் தெரியும்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version