November 26, 2022

திருமண மேடையில் மனைவி போட்ட நடனம்.. கண்ணீர் விட்ட மாப்பிள்ளை.. பலரின் மனதை கொள்ளை கொண்ட வீடியோ..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

அதிலும் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் தோழிகள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது.ஆனால் அதையெல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்யும்வகையில் இங்கே ஒரு மணமகள் செம நடனம் போட்டுள்ளார். அதிலும் மணமகள் வரவேற்பு உடையில் அவர் போடும் நடனம் செம வைரல் ஆகிவருகிறது. அதில் இந்திப்பாடல் ஒன்றுக்கு ஆடுகிறார் மணமகள். அது தன் கணவனை கண்ணனாகவும், மனைவியை ராதையாகவும் நினைத்து உருகும் பாடல். அதைக் கேட்டதும் மணமகன் கண் கலங்கி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். இதோ அந்தக் காட்சியை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *