November 26, 2022

துளி கூட மேக்கப் இன்றி புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்.. வருத்தப்படும் ரசிகர்கள்..!

தமிழ்த்திரையுலகில் விஜய், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். துரு, துரு நடிப்பும், அழகான வசீகரிக்கும் முகமும் காஜல் அகர்வாலுக்கு தமிழர்கள் மத்தியில் அதிக ரசிகர்களை ஏற்படுத்தித் தந்தது. காஜல் அகர்வாலுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த உள்வடிவமைப்புத் தொழில்நுட்ப வல்லுனரும், தொழில் அதிபருமான கெளதம் கிட்சுலுவை காதலித்துத் திருமணம் செய்தார். திருமணம் முடிந்ததும் தன் காதல் கணவர் கிச்சுவுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் போயிருந்தார் காஜல் அகர்வால். இந்த ஹனிமூனுக்கு மட்டும் 40 லட்ச ரூபாய் செலவு செய்தனர். அந்தப் புகைப்படங்களும் டிரெண்டிங் ஆகியிருந்தது.தன் திருமணத்துக்குப் பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார் காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால் இப்போது கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்ததும் கேன்சல் ஆகியுள்ளது. இந்நிலையில் துளிகூட மேக்கப் இல்லாமல் சுடிதார் போட்டுக்கொண்டு ஒரு போஸ் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால். அதைப் பார்த்த நெட்டிசன்கள் காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் வயதானவர் போல் மொக்கையாக இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *