November 26, 2022

பாவாடை, தாவணியில் பார்த்த உருவமோ… அடடே நம்ம பிரியாமணியா இது?

பிரியா மணி தமிழில் முண்ணனி நடிகையாக வலம் வந்தவர். பருத்திவீரன் படத்தில் கிராமத்து முத்தழகாக அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இந்தப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ப்ரியாமணிக்கு இப்போது 37 வயது ஆகிறது.

கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான எவரே அடகாடு படத்தின் மூலம் கதாநாயகியாக கேரியரை ஸ்டார்ட் செய்தார். பருத்திவீரன் படம் ப்ரியாமணியை வேற லெவலில் ஹிட் ஆக்கியது. பருத்திவீரன் படத்தி மூலம் தமிழ்த்திரையுலகிற்கு சிவகுமாரின் மகனாக அறிமுகம் ஆன கார்த்தி இப்போது முண்ணனி நடிகர்களின் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில்கூட அவர் நடித்த கைதி, சுல்தான் படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

ஆனால் பிரியா மணி மார்க்கெட் இழந்தார். அதன் பின்னர் தான் விட்ட வாய்ப்பை பிடிப்பதற்காக அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படங்களை வெளியிட்டுக்கொண்டே இருந்தார். இதுவரை கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் வெளியிட்ட ப்ரியா மணி, இப்போது கிராமத்து உடையில் பாவாடை, தாவணியில் போஸ் கொடுத்துள்ளார். இதில் 14 வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த முத்தழகு கேரக்டரைப் போலவே இப்போதும் இருக்கிறார் பிரியா மணி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

pic 1

pic 2

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *