November 24, 2022

பிக்பாஸ் புகழ் ஐக்கி பெர்ரியின் குடும்பமா இது? அதுவும் தலை முடி கருப்பாக ஐக்கி பெர்ரி எப்படி இருக்காங்கன்னு பாருங்க…!

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. ஓவியா முதல் ரைசாவரை பலருக்கும் இதன் மூலம் படவாய்ப்புகள் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த ஷோ ஏற்கனவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசன் தொடங்கி விறு, விறுப்பாக நடந்து வருகிறது.

இந்த சீசனில் இமாம் அண்ணாச்சி தொடங்கி, தொகுப்பாளர் பிரியங்கா வரை மக்களுக்குப் பிடித்த பலரும் இந்த ஷோவில் இருக்கிறார்கள். இந்த முறை அவர்களில் ஒரு போட்டியாளராக ஐக்கி பெர்ரியும் இருக்கிறார். இந்த சீசனில் இதுவரை பெரிய சண்டைகள் எதுவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவில்லை. இப்போதுதான் சின்ன, சின்ன சண்டைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. பிரபல ரேப் பாடகியான ஐக்கி பெர்ரியின் பூர்வீகம் தஞ்சாவூர்.

இவர் மருத்துவராக இருந்து ரேப் பாடகியானவர். அண்மையில் இவரது காதலனின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இப்போது ஐக்கி பெர்ரி தனது அப்பா மற்றும் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்.

pic 1

pic 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *