அம்மி மிதித்து…அருந்ததி பார்த்து.. தமிழர் பாரம்பர்ய முறையில் திருமணம் செய்த வெளிநாட்டினர்.. தமிழ் மக்களை கவர்ந்த புகைப்படங்கள்..!

அம்மி நம் இந்தியக்கலாச்சாரத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்பு உடையது. அதிலும் தமிழ் கலாச்சாரத்துடன் அம்மிக்கு இருக்கும் தொடர்பைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

அம்மி..மிதித்து அருந்ததி பார்த்து தான் திருமணமே செய்வார்கள் தமிழர்கள். அதுமட்டும் இல்லாமல் இன்று எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்துவிட்டது. அன்று இடுப்பு வளைய இட்லிக்கு பெண்கள் மாவு ஆட்டினார்கள். இன்று அந்த வேலையை கிரைண்டர் செய்கிறது. அதேபோல் கஷ்டப்பட்டு பெண்கள் துவைக்கும் வேலையை இன்று வாசிங் மிஷின் செய்கிறது. இதேபோல் அம்மியில் அரைத்து செய்த சட்னிக்கும் கூட இப்போது மிக்ஸி வந்துவிட்டது. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது தமிழர் கலாச்சாரத் திருமணத்தில் மிகவும் முக்கியமானது. மெட்டி ஒலி என்னும் பெயரில் சன் டிவியில் ஹிட் அடித்த சீரியலில் கூட அம்மி மிதித்து எனத் தொடங்கும் பாடல்தான் வரும்.

இன்று நம் தமிழர்களே நம் கலாச்சாரத்தை புறந்தள்ளி நகர்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில் இங்கே வெளிநாட்டுக்காரர்கள் அதிலும் வெள்ளைக்கார ஜோடி ஒன்று அம்மி மிதித்து…அருந்ததி பார்த்து இந்துமுறைப்படி திருமணம் செய்திருக்கிறது. தொடர்ந்து இந்த ஜோடி கோமாதாவை வணங்கி, அக்னி சான்றாக மந்திரம் ஓதி, தாலி கட்டி நம் தமிழ் கலாச்சார முறையில் கல்யாணம் செய்துள்ளனர்.

தொடர்ந்து அவர்களே கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு உணவும் பரிமாறினார்கள். இப்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. தமிழ் கலாச்சாரம்ன்னா சும்மாவா?

 

Leave a Comment

Your email address will not be published.