தமிழ்த்திரைப்பட நடிகர் சார்லிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. நகைச்சுவைப் பாத்திரம் என்றாலும், குணச்சித்திரப் பாத்திரம் என்றாலும் பட்டையைக் கிளப்பிவிடுவார் சார்லி. நடிகர் சார்லியின் இயற்பெயர் மனோகர். சார்லி நாம் அன்று பார்த்தது போலவே இருந்தாலும் சார்லிக்கு இப்போது 63 வயது ஆகிறது. தமிழ் சினிமாவில் சார்லி நாற்பது ஆண்டுகளாகத் தாக்குப்பிடித்து நிற்கிறார்.
தமிழில் 600 படங்களுக்கும் மேல் நடித்தவர் என்னும் பெருமையும் சார்லிக்கு உண்டு. சார்லி 1988ல் கல்லூரி படித்தார். அப்போதே சிவாஜி, முத்துராமனின் குரலில் எல்லாம் மிமிக்ரி செய்து அசத்துவாராம் சார்லி. இயக்குனர் பாலசந்தரால் சினிமாவுக்கு வந்தவர், சார்லி. அப்போதே மாஸ்டர் டிகிரி முடித்திருந்தார் சார்லி. அன்றைய காலத்தில் மாஸ்டர் டிகிரி முடித்தவர்களுக்கு பல வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். ஆனாலும் கலை ஆர்வத்தினால் சார்லி, வேலைக்கு முயற்சிக்காமல் சினிமாவுக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து சார்பில் படிப்பு ஆர்வத்தால் முனைவர் பட்டமும் வாங்கிவிட்டார். சார்லியின் மனைவியின் பெயர் ஹனிமா. சார்லியின் மகன் ஆதித்யா. இவருக்கும், அமிர்தா என்னும் பெண்ணுக்கும் சென்னையில் சமீபத்தில் மிகப் பிரமாண்டமாகத் திருமணம் நடந்தது. இதில் தமிழ்த்திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். இப்போது இணையத்தில் முதன்முறையாக நடிகர் சார்லியின் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
pic 1