உங்க வீட்டு டாய்லெட்டை க்ளீன் செய்யப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சுடாதீங்க..!

ஒரு வீட்டின் ஆரோக்கியத்தை அவர்கள் வீட்டுக் கழிப்பறையில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். எந்த வீட்டில் கழிப்பறை சுத்தமாக இருக்கிறதோ அங்கே நோய்க்கிருமிகளின் தாக்கம் குறைவாக இருப்பதாக அர்த்தம். அதேநேரம், நாம் நம் வீட்டுக் கழிப்பறையை சுத்தம் செய்வதிலும் சில சூட்சமங்கள் இருக்கிறது.

அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே நம்மவர்கள் பலரும் டாய்லெட்டில் லிக்கியூடை அதாங்க டாய்லெட் க்ளீனரை விட்டு உடனே தேய்த்துக் கழுவிவிடுவார்கள். ஆனால் அப்படி செய்யக் கூடாது. லிக்கியூடை ஊற்றிவிட்டு 15 நிமிடங்களேனும் காத்திருக்க வேண்டும். இதேபோல் நாம் டாய்லெட்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பிரஸையும் அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டும்.

சிலர் டாய்லெட்டில் இருக்கும் கிருமிகளே நம்மைப் பார்த்து சிரிக்கும் அளவுக்கு தேய்ந்த பிரஸ்ஸால் கழுவிக் கொண்டிருப்பார்கள். இதேபோல் வெஸ்டர்ன் டாய்லெட்டின் மூடி, இந்தியன் டாய்லெட்டில் கால்வைக்கும் இடம், துவாரம் என அனைத்து இடங்களையும் அழுத்தித் தேய்த்துக் கழுவ வேண்டும். இதேபோல் டாய்லெட்டை மூடி கால்வைக்கும் இடத்தில் வினிகர் ஊற்றி சில நிமிடங்களுக்குப் பின் அதில் கொஞ்சம் சோடா உப்பைத் தூவி, கொஞ்சம் வினிகரும் ஊற்றவேண்டும். இப்படிச் செய்து 10 நிமிடங்களுக்குப் பின்பு பிரஸ்ஸால் அழுத்தித் தேயுங்கள். நீண்ட நாள் கரை காணாமல் போய்விடும்.

இதேபோல் டாய்லெட் பிரஸ்னரை கதவில் மாட்டி வைக்கலாம். என்னதான் தேய்த்துக் கழுவிவிட்டாலும் அதன் பின் அதிகளவு தண்ணீர் விட்டுக் கழுவுவது டாய்லெட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். இதேபோல் டாய்லெட்டை நாம் குளிப்பதற்கு முந்தைய வேலையாக வைத்துக்கொண்டால் ரொம்ப ஈஸி. இதேபோல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறைகளையும் பயன்படுத்தி கழுவுவது நல்லது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *