பிரபலங்களை குழந்தைப் பருவ புகைப்படமாகப் பார்ப்பது மிகவும் அழகானது. அது நம்மை வெகுவாக ரசிக்கவும் வைக்கும். அந்த வகையில் இப்போது ஒரு குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.பார்க்கவே துரு, துருவென அழகாக இருக்கும் இந்தக் குழந்தை இப்போது தமிழில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் உச்ச நட்சத்திரமாக உள்ளது. அது யார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.
பார்க்கவே அழகாக துரு, துருவென இருக்கும் இந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை சுனிதா கோகோய் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் டைட்டில் வென்றார். இப்போது அம்மணி சுனிதா ஹீரோயினாகவும் நடித்துவருகிறார்.
விவன் என்னும் புதுமுக இயக்குனர் நடித்து, தயாரிக்கும் கருப்பு ஆடு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இணையத்தில் செம ஹிட்டான கரடி ராஜா என்னும் கதையை மையமாக வைத்து இதை உருவாக்கி உள்ளனர். இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு செம கவர்ச்சிக் குத்தாட்டம் போட்டிருக்கிறார் சுனிதா.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 8 கோமாளிகளில் ஒருவராகவும் வலம் வருகிறார் சுனிதா. காஞ்சனா 3 படத்திலும் அம்மணி நடித்திருக்கிறார். இவரது சின்ன வயதுப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.