நடிகர் தம்பிராமையாவின் மகனா இது? இந்த பிரபல ரியாலிட்டி ஷோவில் கூட அசத்துறாரே…

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் அதாங்க சினிமவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் ஒட்டுமொத்த மக்களின் புகழ் வெளிச்சம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் வீட்டுக்கு, வீடு டிவி பெட்டி வந்துவிட்டதால் அனைவரும் வீட்டில் நிறைய நிகழ்ச்சிகளை டிவியில் பார்க்கின்றார்கள். இதனால் சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் பெரிய அளவில் ரீச் இருக்கிறது.

முன்பு சன் டிவி சீரியல்கள் தான் டாப்பில் இருந்தது. இப்போது விஜய் டிவியும் அந்த காம்பிடேஷனில் களத்தில் இருக்கிறது. அதேபோல் பல சேனல்களும் இன்று ரியாலிட்டி ஷோக்களை போட்டி போட்டுக்கொண்டு நடத்துகின்றன. அதில், விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஷோவுக்கே கடும் போட்டியாக இருக்கும் நிகழ்ச்சி தான் ஜூ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவல். இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்த ஷோவில் நடிகர், காமெடியன் தம்பி ராமையாவின் மகனும் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெயர் உமாபதி. ஆரம்பத்தில் பைலட் ஆகத்தான் விருப்பப் பட்டாராம் உமாபதி. உமாபதிக்காக தம்பி ராமையா இதுவரை எந்த இயக்குனரிடமும் சிபாரிசு கேட்டதில்லையாம். உமாபதியும் அதையே பாலிசியாக வைத்திருக்கிறார். தம்பிராமையா கைக்காசைக் கொட்டி தன் மகன் உமாபதியை வைத்து மணியார் குடும்பம் என்னும் படத்தை எடுத்தார். ஆனால் அதை மக்களிடம் சரியாகக் கொண்டுபோய் சேர்க்காததால் கையைச் சுட்டுக்கொண்டார்.

இப்போது சர்வைவல் நிகழ்ச்சியில் தன் மகன் நன்றாக விளையாடி வருவதாகக் தம்பி ராமையா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.