Z+ பிரிவை மிஞ்சிய பாதுகாப்பு… புதிதாக பிறந்த குட்டியானை.. எப்படி பாதுகாப்பாக யானைக் கூட்டம் கூட்டிப் போகுதுன்னு பாருங்க..!

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. இங்கே யானை கூட்டம் ஒன்று செய்யும் ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த யானை கூட்டம் அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

காட்டுக்குள் ஒருவர் தன் காரில் குடும்பத்தோடு சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பார்த்த காட்சிகளே பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த யானைகள் என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? பிறந்து ஒருவாரமே ஆன குட்டியை யானைக் கூட்டம் ஒன்று மிக அழகாக பாதுகாப்போடு அழைத்துச் செல்கிறது. அந்த யானைக்கு மிக அழகாக நடக்கும் பயிற்சியும் கொடுக்கிறது. இந்த யானைக் கூட்டம் ரோஸ் கலரில் இருக்கும் பிறந்த யானைக் குட்டியை உச்சபட்ச பாதுகாப்போடு சுற்றிலும் சூழ்ந்துகொண்டு அழைத்துச் செல்லும் காட்சி நம்மை அப்படியே சிலிர்க்க வைக்கிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

Leave a Comment

Your email address will not be published.