வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் அப்பா… கதறி அழும் மகன்.. தந்தை மகன் பாசத்தைச் சொல்ல இதுக்கு மேல வீடியோ இல்லை..!

வெளிநாட்டு வேலை என்பது என்னதான் கைநிறைய பணத்தைக் கொடுத்தாலும், குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. எப்போது தன் உறவுகளைப் பார்ப்போம் என தவிப்புடனே அவர்களது நாள்கள் நகரும். அதேபோல் குடும்ப உறவுகளுக்கும் தங்கள் வீட்டுப் பிள்ளையை எப்போது பார்ப்போம் என எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.

அதிலும் தன் சொந்த, பந்தங்களின் திருமண நிகழ்ச்சிக்குக் கூட வர முடியாமல் வெளிநாட்டில் சிக்கிக் கொள்வதெல்லாம் சொல்ல முடியாத பெருந்துயரம். அதேநேரத்தில் அவர்களின் உணர்வுகள் முழுக்க, முழுக்க தன் குடும்பத்தைச் சுற்றியே இருக்கும். அந்தவகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்த தந்தை ஒருவர் இங்கே தன் மகனோடு விளையாடிப் பொழுதைக் கழித்தார். தொடர்ந்து அவர், தன் லீவு முடிந்ததும் மீண்டும் வெளிநாட்டுக்கு கிளம்பினார். அப்பா தன்னை விட்டுவிட்டு வெளிநாடு செல்வதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மகன் கதறி அழுதான். தன் குட்டி மகனின் அழுகையைப் பார்த்துவிட்டு ஆற்றாமையோடு தந்தையும் அழத் தொடங்கினார். இந்த வீடியோ வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வோர் குடும்ப உறவினைப் பிரிந்து தவிக்கும் தவிப்பைச் சொல்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

Leave a Comment

Your email address will not be published.