முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்யும் குட்டிப் பாப்பா… பைலட்டாக வந்த தந்தை: குழந்தை கொடுத்த க்யூட் ரியாக்சனைப் பாருங்க..

ஒரு குட்டிக் குழந்தை செய்யும் செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி அந்தக் குழந்தை என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிக்குழந்தை முதன் முதலில் விமானத்தில் பயணம் செய்கின்றது. அந்தக் குழந்தையின் பெயர் ஷெனய். மூன்று வயதே ஆன அந்தக் குழந்தை தன் தாயுடன் டெல்லிக்கு விமானத்தில் செல்ல விமானம் ஏறியது. குழந்தையின் கையில் டிக்கெட் உடன் அந்தக் குழந்தை மிகுந்த உற்சாகத்துடன் விமானத்தில் இருந்தது. அதே விமானத்தின் பைலட் அந்த குழந்தையின் அப்பா தான். விமானிக்கான வெள்ளை உடையில் தன் தந்தையைப் பார்த்ததும் அந்தக் குழந்தை மிகவும் உற்சாகத்தில் முகம் ததும்பும் புன்னகையோடு அப்பா என சிரித்துக்கொண்டே உற்சாகம் அடைகிறது.

இந்தக் குழந்தையின் க்யூட் ரியாகனை வீடியோவாக எடுத்த குழந்தையின் தாய் அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published.