முன்பெல்லாம் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தார்கள். இப்போதெல்லாம் வீட்டுக்கு, வீடு டிவி பெட்டி இருப்பதால் சின்னத்திரை நடிகர்களும் அதற்கு இணையாக ரீச் ஆகிவிடுகிறார்கள். அதிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அடுத்தடுத்த சீசன்களில் வரவேற்பைக் குவிப்பது தான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி. இந்த சீசனில் கலந்து கொண்டு பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர்தான் ரின்சன். மில்லி மீட்டர் என மக்கள் மத்தியில் அடைமொழியால் அறியப்பட்ட இவர், விஜய்யுடன் நண்பன் படத்திலும் நடித்தார்.
பார்க்க க்யூட் பையனாக இருந்த இவர் பெரிய மீசை, அடர்த்தியானத் தாடி என அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த ரின்சன் இப்படி மாறிட்டாரே எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.
pic 1
pic 2