சர்வைவர் நிகழ்ச்சிக்குப் போன வி.ஜே பார்வதியா இது? புகைப்படம் பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்..!

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தார்கள். இப்போதெல்லாம் வீட்டுக்கு, வீடு டிவி பெட்டி இருப்பதால் சின்னத்திரை நடிகர்களும் அதற்கு இணையாக ரீச் ஆகிவிடுகிறார்கள். அதிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அந்த வகையில் விஜய் டிவியில் பிக்பாஸ்க்கு கடும்போட்டியாக இருப்பது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சிதான். நடிகர் அர்ஜூன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார். இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் காடர்கள், வேடர்கள் என இரு அணிகலாகப் பிரிக்கப்பட்டு இவர்களுக்கு சவால் கொடுக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் விஜே பார்வதியும் போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

இந்த வாரம் விஜே பார்வதி போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு, பார்வதி ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் முன்பு இருந்ததை விட இப்போது கருத்துப் போய் உள்ளார். சர்வைவர் நிகழ்ச்சியின் போது விஜே பார்வதி தன்னை சுமாரான மதுரை அழகி எனச் சொல்லுவார். ஆனால் அவர் இப்போது சர்வைவர் நிகழ்ச்சிக்குப் பின் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் முன்பை விட ரொம்பவே கருப்பு நிறத்தில் இருக்கிறார் விஜே பார்வதி. அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே மதுரை அழகிக்கு இப்படியொரு நிலையா? என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published.