யானையோடு கொஞ்சி விளையாடும் குட்டி குழந்தை.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதிலும் குழந்தைகளைப் பார்த்தால் யானைகள் குழந்தைகளாகவே மாறிவிடும் போலிருக்கிறது. அதை உணர்த்தும்வகையில் இங்கே ஒரு சம்பவம் நடந்துள்ளது.

குழந்தைகள் எதைச் செய்தாலும் அழகுதான். அதனால்தான் அவர்கள் செய்யும் சின்ன, சின்ன செய்கைகள் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு பேரானந்தமாக மாறிவிடுகிறது. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள்பூத்தாலும் ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது என சொல்வார்கள்.

இங்கேயும் அப்படித்தான். ஒரு குட்டிக்குழந்தை ஒன்று யானையோடு மிக ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தை கொடுக்கும் வாழைப்பழம் உள்பட உணவுப் பதார்த்தங்களை வாங்கிக்கொண்டு அந்த யானை செம கேஸ்வலாக குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. குறித்த இந்தக் காட்சி இணையத்தில் ஏராளமான பேரின் மனங்களைக் கொள்ளை கொண்டு வருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

Leave a Comment

Your email address will not be published.