தல அஜித்க்கு தங்கையாக நடித்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா… என்ன படம் தெரியுமா? இவ்ளோ நாள் இது தெரியாமப் போச்சே!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர், சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில் தனம் பாத்திரத்தில் வருபவர் நடிகை சுஜிதா. இவர் இன்று, நேற்று நடிப்பவர் அல்ல. பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக வந்த சுஜிதா கேரளத்தின் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட ஒரு டஜன் படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த சுஜிதாவுக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்னின் கதை வாசல்திறந்து விட்டது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இதுவரை 30க்கும் அதிகமான சீரியல்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா.

விளம்பரத்துறையை சார்ந்த தனுஷ் என்பவரைத் திருமணம் செய்திருக்கும் சுஜிதாவுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. சுஜிதா இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் ஏக பேமஸ் ஆகிவிட்டார். அதேபோல் தல அஜித்திற்கு தமிழகத்தில் ரசிகர்கள் இல்லாத வீடே இல்லை எனச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அஜித்க்கு ரசிகர்கள் அதிகம். சுஜிதா, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, தல அஜித்குமாரை வைத்து எடுத்த வாலி படத்தில் தல அஜித்திற்கு தங்கையாக நடித்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Leave a Comment

Your email address will not be published.