65 வயது முதியவரை காதலித்துக் கல்யாணம் செய்த 25 வயது இளம்பெண்… கிளி போல பெண்ணுக்கு நடந்தது என்ன?

திருமணத்திற்கு வரன் கிடைப்பதே இப்போதெல்லாம் பெரிய சவாலான விசயம் ஆகிவிட்டது. அதிலும் கிராமப் பகுதிகளில் இருக்கும் 90 ஸ்கிட்ஸ்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது. தங்கள் திருமண வரனைக் கெடுத்துவிட்டவர்களை போஸ்டர் ஒட்டி வெளிச்சம் காட்டும் செய்திகளையெல்லாம் படித்துவருகிறோம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக முக்கியமான நிகழ்வு எது என்றால் திருமணம் தான். அடுத்த 50 ஆண்டுகால வாழ்க்கைக்கு அதுதான் அஸ்திவாரமாக இருக்கும். கரோனாவால் பொதுமுடக்கமும் சில காலம் வந்துவிட்டதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பையும் இழந்தனர்.அப்படி வேலை இழந்த 90ஸ் கிட்ஸ் பலரும் திருமணத்தை ஏக்கத்தோடே பார்த்து வருகின்றனர். ஆனால் அவர்களையெல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்துள்ளார் 65 வயது மணமகன் ஒருவர்.

 

பார்க்கக் கிளிபோல் அம்சமாக இருக்கும் அழகிய இளம்பெண்ணைக் காதலித்துக் கைப்பிடித்திருக்கிறார் இந்த தாத்தா. கர்நாடகா மாநிலத்தின் தும்குரு மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சங்கரண்ணா என்ற 65 வயது முதியவரும், 25 வயதே ஆன அழகிய இளம்பெண் மோகனாவும் காதலித்துத் திருமணம் செய்துகொ

 

ண்டுள்ளனர். மோகனாவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே வேறு ஒரு இளைஞரோடு திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரு

ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர், மேகனாவை விட்டுப் பிரிந்தார். அதன்பின்பு அவர் எங்கே சென்றார் என்ன ஆனார் என்றேத் தெரியவில்லை.

இந்நிலையில் தான் மேகனாவிடம் நட்பாக பழகினார் சங்கரண்ணா. ஒருகட்டத்தில் இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இருவரும் சேர்ந்து திருமணம் செய்துகொண்டனர். கூடவே மோகனா தான் மாலையும், கழுத்துமாக நிற்கும் புகைப்படத்தை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சோசியல் மீடியாக்களில் தட்டிவிட அது இப்போது வைரல் ஆகிவருகிறது. ஆனாலும் 90ஸ் கிட்ஸ் தான் பாவம் அய்யா..இன்னும் பொண்ணு கிடைக்காமல் அள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *