ஆங்கிலம் என்பது மொழி தானே தவிர அதுவே அறிவு கிடையாது. அதனால் ஆங்கிலம் தெரியாதவர்களை முட்டாள் எனக் குறைத்து மதிப்பிடுவது மிகவும் ஆபத்தானது. தவறானது. அதேபோல் நன்கு டிப் டாப் உடையில் இருப்பவர்களுக்குத் தான் ஆங்கிலம் தெரியும் என்னும் புரிதலும் தவறானது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த பாட்டியின் ஆங்கில அறிவைக் காட்டிலும், அவரது பரந்த மனது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.
அப்படி அந்தப் பாட்டி என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். புனேவில் தான் இந்தப் பாட்டி வசித்து வருகிறார். இந்த பாட்டியின் புகைப்படம் வைரலாக ஷிகா ரதி என்பவர் வெளியிட்ட புகைப்படமே காரணம். கூடவே அவர் தனது பேஸ்புக் பதவில், நானும், என்னோட பிரண்டும் புனேவில் இருக்கும் எம்.ஜி.ரோடுக்குச் சென்றோம். அங்கே ரடன் என்னும் பாட்டியைப் பார்த்தோம்.
அந்தப் பாட்டி ஒரு அட்டை பெட்டி நிறைய பேனா வைத்து விற்றுக்கொண்டு இருந்தார். அந்த பேனா வைத்திருந்த அட்டையில், நான் பிச்சையெடுக்க விரும்பவில்லை. எனவே என் பேனாக்களை வாங்கிக் கொள்ளுங்கள் என எழுதியிருந்தது. இந்த வயதான காலத்திலும் தன் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்துவரும் இந்தப் பாட்டியைப் பார்த்து அதிசயத்து விட்டோம்.’ என உருக்கமாக எழுதியுள்ளார்.
வழக்கமான வயோதிகர்கள் நம்மிடம் செலவுக்கோ, பஸ்ஸிற்கோ, சாப்பிடவோ காசு கேட்பார்கள். ஆனால் இந்தப் பாட்டி பிச்சையெடுக்க விரும்பவில்லை. பேனா வாங்கிக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டிருப்பது செம வைரல் ஆகிவருகிறது. இப்போ சொல்லுங்க இவுங்க பாட்டி இல்லை தானே…பியூட்டி தானே! மனசைச் சொல்கிறோம்!