தீபாவளி களைகட்டியுள்ளது. மக்கள் கொரோனா அச்சத்தால் கூட்டத்தில் மாஸ்க் அணிந்து பயணிக்கிறார்கள். மற்றபடி, கடைகளில் கூட்டங்களுக்கு பஞ்சம் இல்லை. மக்கள் உற்சாகமாக தீபாவளி பர்சேஜில் இருக்கிறார்கள். மக்களின் மனங்களைக் கவரும்வகையில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி, போட்டுக்கொண்டு அதிரடி ஆபர்களை அள்ளி வீசுகின்றன.
அந்த வகையில் ஒரு ஜவுளிக்கடை ஆடு பரிசை அறிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதன் பிண்ணனி மிகவும் சுவாரஸ்யமானது. வழக்கமாகவே மிக்ஸி, பேன், கிரைண்டர், ப்ரிட்ஜ், வாசிங் மிஷின் என்று தான் இலவசங்கள் அறிவிக்கப்படும். ஆனால் கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் நியு சாரதாஸ் என்னும் கடையின் உரிமையாளர் முதல் பரிசை மட்டும் தங்க நாணயமாக அறிவித்துவிட்டு, இரண்டு மற்றும் மூன்று, நான்காம் பரிசுகளை ஆட்டு கிடாவை பரிசாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறும்போது, ‘இது கிராமப் பகுதி. கொரோனாவால் வேலை இழந்த பலரும் இங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகத்தான் இப்படி ஒரு பரிசை வைத்தேன். இதன் மூலம் சிலருக்கு ஆடு வளர்ப்பில் ஆர்வம் வரும். அதன் மூலம் அவர்களின் பொருளாதாரமும் மேம்படும்.’’என்றார்.