இந்த மாட்டோட அறிவைப் பாருங்க.. சிலிர்த்துப் போவீங்க… ஐந்தறிவு ஜீவனுக்குள் இப்படி ஒரு ஞானமா?

நாம் பொதுவாகவே மனிதனுக்குத்தான் அதீத அறிவு இருப்பதாக நினைக்கிறோம். இவ்வளவு ஏன் பாடப் புத்தகத்தில் கூட மனிதனுக்கு மட்டும் தான் ஆறு அறிவு என்றும், இதர ஜீவராசிகளுக்கு ஐந்து அறிவு என்றும் தான் வருகிறது. ஆனால் அதையெல்லாம் அசால்டாக தூக்கிச் சாப்பிடும் வகையில் இங்கே ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுவும் மாட்டை மையப்படுத்தி! இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாகவே வீட்டில் பசு மாடு இருப்பது அதிர்ஷ்டம் என சொல்வார்கள். அதனால் தான் பசுவை கோமாதா எனச் சொல்கிறோம். பசு மாடு மிகவும் பாசமாக பழகக் கூடியதுகூட. மனிதர்களோடு நெருக்கமாக இருக்கும் பிராணிகளில் முதன்மையானது மாடு. டீ, காபி என எதைக் குடித்தாலும் அதற்கு மூலப்பொருளான பாலைக் கொடுப்பதால் பசு நமக்கு அன்னமிடும் விலங்கும் கூட. அதேபோல் காளை மாட்டை விவசாயத் தேவைக்காக வளர்ப்பார்கள். காளை மாடுகள் வயலில் விவசாய வேலையை செய்வதுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் கலந்துகொண்டு அசத்துகின்றன

அதேபோல் காளை மாட்டை வண்டி கட்டி இழுத்துச் செல்லவும் விவசாயிகள் பயன்படுத்துவார்கள். அந்த வரிசையில் இங்கே ஒரு விவசாயி புல் வெட்டிக் கொண்டுவர தன் காளையை, வண்டியில் பூட்டிக் கொண்டு சென்றார். அவர் வேறு ஒரு வேலையாக அவசரமாகச் செல்ல வேண்டி வந்துவிட்டது. உடனே தன் மாட்டைப் பார்த்து நீ வீட்டுக்கு போயிடு ராசா என சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இதை சுற்றியிருந்தவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருக்க அந்த காளை மாடோ, தானாகவே வண்டியின் முன்பகுதியில் இழுத்துச் செல்வதற்குக் கணக்காகத் திரும்பிக் கொண்டு தன் கால் முட்டியைக் குனித்து தானே வண்டியைத் தூக்கி தன் கழுத்துப் பக்கம் போட்டுவிட்டு வீடு நோக்கிச் சென்றது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Leave a Comment

Your email address will not be published.