நடிகர் விவேக்கோடு 20 வருசத்துக்கு முன்பே நடித்திருக்கும் இயக்குனர் சமுத்திரகனி… எந்த படம் தெரியுமா.? பலருக்கும் தெரியாத தகவல் இதோ..!!

அண்மையில் நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணம் திரையுலகை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கி எடுத்துவிட்டது. வெறுமனே நகைச்சுவை என்பது சிரிப்புக்காக என்று மட்டும் இல்லாமல் அதன் மூலம் சமூகத்துக்கும் விழிப்புணர்வு ஊட்டிவந்தார் விவேக். அதனாலேயே அவரை ‘சின்ன கலைவாணர்’ என்றும் புகழ்ந்தனர்.

ரஜினி, கமல் தொடங்கி அஜித், விஜய் வரை அனைவரோடும் சேர்ந்து நடித்து அசத்திய காமெடியன் தான் விவேக். அவரோடு இருபது வருடங்களுக்கு முன்பே சமுத்திரக்கனி நடித்திருக்கும் காட்சி இனையத்தில் இப்போது வைரலாகி வருகிறது அதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். சமுத்திரகனியைப் பொறுத்தவரை எப்போதும் சமூக அக்கறையுள்ள படங்களில் தான் நடித்துவருகிறார். அவர் உன்னை சரணடைந்தேன் என்னும் படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இவர் இயக்கிய சுப்பிரம்ணியபுரம் திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. பருத்திவீரன் படத்திலும் கஞ்சா கருப்போடு சேர்ந்து ஒரு காட்சியில் சமுத்திரக்கனி வருவார். முதலில் சமுத்திரகனி கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தார். ஆரம்பத்தில் உதவி இயக்குனர் ஆவதை விட நடிப்பதில் தான் சமுத்திரகனிக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. பாலசந்தர் தான், பார்த்தாலே பரவசம் படத்தில் விவேக்கோடு ஒரு காட்சியில் சமுத்திரக்கனியை நடிக்க வைத்தார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் சமுத்திரக்கனியே மனம் திறந்து பேசியுள்ளார்.

pic 1

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *