இணையத்தில் கலக்கும் ஜோடிகள்.. என்ன அழகான நடனம் பாருங்க.. ஒரிஜினல் சினிமா நடனமே தோற்றுவிடும் போலயே..!

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார்.

இதேபோல் இப்போது இளம்பெண்களும், இளைஞர்களும் சேர்ந்து பாடலுக்கு நடனம் ஆடி அவ்வப்போது செம வைரல் ஆகிவருகின்றனர். இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர்.

 

இது அனைவர் மத்தியிலும் அவர்களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. அதிலும் மாடர்ன் உடையில் ஆடுவதைவிட, பாவாடை, தாவணி, சேலை என நம் பாரம்பர்ய உடையில் ஆடுவதைப் பார்க்க பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது.

அதேபோல் இப்போது திருமண புகைப்படக் கலைஞர்களும், தங்களது தனித்திறமையைக் காட்டும் நோக்கத்தில் மணமக்களை ஆடவும் வைக்கின்றனர். இதோ இந்த வீடியோவிலும் சில தமிழ் ஜோடிகள் பட்டையைக் கிளப்பும்வகையில் ஆடுகின்றனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். உண்மையான சினிமாப் பாடல்களே தோற்றுவிடும் போலிருக்கிறது.

 

Leave a Comment

Your email address will not be published.