அடடே பிரபல தொகுப்பாளர் தீபக்கின் மனைவியா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க..

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக வந்து அசத்தியவர் தான் தீபக். இவர் தண்ணியில கண்டம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். மாடலிங், தொலைக்காட்சி தயாரிப்பாளர், சீரியல் நடிகர் என தீவிரமாகச் செயல்படக் கூடியவர்.

இவர் ஹீரோவாக நடித்த கெட்டிமேளம், நிலா ஆகிய சீரியல்கள் செம ஹிட் அடித்தன. சன்டிவியில் தென்றல் சீரியலில் இவர் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். சென்னை லயோலா காலேஜில் பொருளாதாரம் படித்தார் தீபக். காலேஜில் படிக்கும் போதே மாடலிங்கிலும் அசத்தத் துவங்கினார்.

ஜோடி நம்பர் ஒன்னில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர், இரண்டாவது சீசனில் தொகுப்பாளராக உயர்ந்தார். விஜ்ய் டிவியில் பேமஸான தீபக் இப்போது ஜீ தமிழில் உள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு சிவரஞ்சினி என்பவரை திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு இப்போது ஒரு அழகிய மகனும் உள்ளார். தொகுப்பாளர் தீபக்கின் குடும்பப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic 1

 

Leave a Comment

Your email address will not be published.