மெட்ராஸ் திரைப்படம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்த படங்களில் ஒன்று. இயக்குனர் ரஞ்சித் இயக்கி மெகா ஹிட் ஆன இந்தப்படத்தில் அக்மார்க் சென்னைப் பையனாகவே வாழ்ந்திருப்பார் கார்த்தி. இந்தப் படத்தில் ஜானி என்னும் கேரக்டரில் ஒருவர் நடித்திருப்பார். இவரது நிஜபெயர் ஹரி கிருஷ்ணன்.
இவருக்கு இப்போது 25 வயதே ஆகிறது.இந்த வாய்ப்பு குறித்து அண்மையில் பேசியிருக்கும் ஹரி கிருஷ்ணா, ‘அட்டக்கத்தி படம் எடுத்துக்கொண்டிருந்த போது நான் தினமும் சூட்டிங்கை வேடிக்கைப் பார்ப்பேன். அதில் என்னைப் பார்த்த ரஞ்சித் அண்ணன் அதில் என்னை ஒரு சீனில் நடிக்க வைத்தார். அதில் நல்லா நடிச்சுருக்கேன்னும் பாராட்டுனாரு.
கூடவே கூடுதல் சீனில் நடிக்கும் வாய்ப்பும் கொடுத்தாரு. தொடர்ந்து தனுஷ் சார் நடிச்ச மரியான் படத்தில் சின்ன கேரக்டரில் நடிச்சேன். தொடர்ந்து ரஞ்சித் அண்ணா கூப்பிட்டு மெட்ராஸ் படத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவராக நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.நாம் மனநலம் பாதிக்கப்பட்டவராக பார்த்த ஹரி கிருஷ்ணா நிஜத்தில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
pic 1