80ஸ்களில் தமிழ் சினிமாவை கலக்கிய பிரபல ஹீரோயினியா இது..? இவருக்கு இப்படியொரு நிலமையா? புகைப்படம் பார்த்து ஷா க் கான ரசிகர்கள்..!

தமிழ்த்திரையுலகில் நடிகர்களைப் பொறுத்தவரை நீண்ட காலத்துக்கு பீல்டில் இருக்கிறார்கள். ரஜினி, கமல், சரத்குமார் என அந்தவகையில் பெரிய பட்டியலே போடலாம். அதேநேரம் ஹீரோயின்களைப் பொறுத்தவரை அவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பதில்லை. அத்திபூத்தார்போல் நயன், த்ரிஷா என வெகுசிலரே பத்து, பதினைந்து ஆண்டுகளைக் கடந்தும் திரையுலகில் நிற்கின்றனர்.

அந்தவகையில் படத்துக்கு, படம் நாயகிகளின் அறிமுகத்துக்கும் பஞ்சம் இல்லை. அந்தவரிசையில் மிகக்குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை தான் நிஷாந்தி என்கிற சாந்தி ப்ரியா. 1987 களில் ரஜினிக்கே டப் டைட் கொடுத்தவர்தான் ராமராஜன். இவருக்கு ஜோடியாக எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடித்தவர் தான் சாந்தி ப்ரியா. இந்தப் படத்தில் இடம்பெற்ற செண்பகமே பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்த படம் தான் சாந்தி ப்ரியாவுக்கு முதல் படம். இந்தப் படத்தில் அறிமுகமான இவர் பிரபல நடிகை பானுப் பிரியாவின் தங்கை ஆவார்.

புகழின் உச்சியில் இருக்கும் போதே சாந்தி ப்ரியா பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சித்தார்த்தை திருமணம் செய்துகொண்டு முப்பையில் செட்டில் ஆகிவிட்டார். கடந்த 2004 ஆம் ஆண்டு சித்தார்த் இறந்துவிட தனது இருமகள்களுடன் தன் கணவரின் ஸ்டூடியோவை நிர்வகித்து வருகின்றார். இப்போது மீண்டும் சினிமாவுக்கு வர காத்திருக்கும் சாந்திப்பிரியா தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழியானாலும் நல்ல கேரக்டர் அமைந்தால் நடிப்பேன் என பேட்டி கொடுத்துள்ளார்.

pic 1

Leave a Comment

Your email address will not be published.