குழந்தை மனம் குழந்தை மனம்தாங்க.. அயந்து தூங்கிய தந்தையை தொந்தரவு செய்ய மனமின்றி குழந்தை செய்த வேற லெவல் செயல பாருங்க.. வைரல் வீடியோ..!

குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தை அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? பொதுவாக அடம்பிடிக்கும் குழந்தைகளை அவர்களது தாயோ, தந்தையோ தட்டிக் கொடுத்து தூங்க வைப்பது வழக்கம். இங்கே ஒரு குழந்தையை அதன் தந்தை பக்கத்தில் படுக்க வைக்கிறார். ஆனால் குழந்தை தூங்குவதற்கும் முன்பே அதன் அப்பா தூங்கிப் போனார். ஆனால் தூங்கிக் கொண்டிருக்கும் தந்தையை டிஸ்டர்ப் செய்ய விரும்பாதக் குழந்தை தன்னைத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்கிறது. இந்தக் காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *