இதுதான் நிஜ வளர்ச்சி… சாய் பல்லவியின் மறுப்பக்கம் தெரியுமா? இதைப் பாருங்க… அசந்துடுவீங்க!

ரவுடி பேபி பாடலுக்கு தனுஷ்ம், சாய் பல்லவியும் சேர்ந்து ஆடும் ஆட்டம் பட்டி,தொட்டியெங்கும் செம பேமஸ். தனுஷ், சாயாசிங் சேர்ந்து ஆடிய மன்மத ராசா பாடலுக்குப்பின் அதிகம் ரீச் ஆன பாடல் அதுதான். அந்த சாய்பல்லவி ஹீரோயின் ஆவதற்கும் முன்பே சின்ன, சின்ன ரியாலிட்டி ஷோக்களிலும் தலைகாட்டியிருக்கிறார்.

கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ஹிட் ஆனவர் சாய் பல்லவி. கடந்த 1992ல் பிறந்த இவர் நடிகை மட்டுமல்ல, சிறந்த நடனக் கலைஞரும்கூட! இவர் 2016ல் துல்கர் சல்மானுடன் சேர்ந்து கலி என்ற படத்தில் நடித்தார். 2017ல் பிடா படத்தின்மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆனார் சாய்பல்லவி.

தற்போது அம்மணியின் கைவசம் விராட பருவம் உள்பட இரண்டு தெலுங்குப்படங்கள் இருக்கின்றன. இதில் விராட பருவம் படத்தில் பெண் நக்சலைட்டாக நடிக்கிறார். சாய்பல்லவி பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே தமிழில் சிறு,சிறு பாத்திரங்களில் நடித்திருக்கிறார். தாம் தூம் படத்தில் கூட ஹீரோயினோடு வலம் வருவார். இப்போது தன் தாய் மொழியான மலையாளத் திரையுலகை விட தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கிறார் சாய் பல்லவி. இவர் அண்மையில் நடித்த லவ் ஸ்டோரியும் மெகா ஹிட் அடித்தது.

சாய் பல்லவி ஆரம்பகாலத்தில் தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு ஆடியிருக்கிறார். இவ்வளவு ஏன், அவரது நடனத்துக்கு பல முன்னணி நடிகைகளும் கமெண்ட் கூறியுள்ளனர். அதில் நம் நடிகை சமந்தாவும் ஒருவர். தெலுங்கில் அவ்வளவு பின்னுக்கு இருந்தவர் இன்று தெலுங்குப் பட புரொடியூசர்களே சாய் பல்லவியின் கால்ஷீட்டிற்காக காத்து நிற்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். வளர்ச்சின்னா இப்படி இருக்கணும் என சாய் பல்லவி புகழ் பாடுகின்றனர் அவரது ரசிகர்கள்.

Leave a Comment

Your email address will not be published.