கடைசிகாலத்தில் யாரும் இன்றி இவ்வளவு கஷ்டப்பட்டாரா நடிகை காந்திமதி? இவர் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோ க ங் களா..?

தமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிப்புக்கு பெயர் பெற்றவர்களில் நடிகை காந்திமதியும் ஒருவர். சுவர் இல்லாத சித்திரங்கள், மண்வாசனை, கரகாட்டக்காரன், 16 வயதினிலே, முத்து ஆகிய படங்கள் காந்திமதியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படங்கள்.

நடிகை காந்திமதி, மனோரம்மாவுக்கே ஒரு காலத்தில் டப் கொடுத்தவர். இருந்தும் மனோரம்மா அளவுக்கு தன்னால் புகழ்பெற முடியவில்லை என்ற வருத்தம் காந்திமதிக்கு ஆழமாக உண்டு. குணச்சித்திர வேடம் என்றில்லாமல், காந்திமதி துவங்க காலங்களில் கிளாமர் நடிகையாகவும், ஹீரோயினாகவும் கூட நடித்தார். சீரியல்களிலும் மை டியர் பூதம், கோலங்கள் ஆகிய தொடர்களிலும் நடித்து இருந்தார்.

அடுத்தடுத்து சினிமா என ஓடிக்கொண்டே இருந்ததால் காந்திமதி திருமணம் செய்துகொள்ளவில்லை. இதனால் அவரது உடன்பிறந்த சகோதிரியையே சார்ந்து இருந்தார். தன் சகோதிரியின் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்தார். காந்திமதி நன்றாக சினிமவில் சம்பாதித்தவரை அவரைக் கண்ணும், கருத்துமாகப் பார்த்துக்கொண்டனர். ஆனால் சினிமாவில் வருமானம் நின்ற் ஒரு கட்டத்தில் கேன்சரும் வந்து பாதிக்கப்பட்டார் காந்திமதி. அதன் பின்னர் குடும்பம் அவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டது. கடைசிக்காலத்தில் தண்ணீர் குடுக்கக் கூட ஆள் இல்லாமல், கவனிக்கவும் ஆள் இன்றி ரொம்பவே பரிதாபமாக இ ற ந் தி ரு க்கிறார் நடிகை காந்திமதி. இந்த சம்பவம் இப்போது தெரிய வந்து அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்னதான் சினிமாவே வாழ்க்கையாகிப் போனாலும் சொந்த வாழ்விலும் ஒருவர் எந்த அளவுக்கு சிரத்தை எடுக்க வேண்டும் என்பதற்கு நடிகை காந்திமதியின் வாழ்க்கையே ஒரு உதாரணம்!

Leave a Comment

Your email address will not be published.