அடடே பிக்பாஸ் அபிஷேக்கின் மனைவியா இது? இவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா…? புகைப்படம் பார்த்து வியந்த போன ரசிகர்கள்..!

பிக்பாஸ் ஷோவில் தலைகாட்டினாலே ஈஸியாக மக்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடலாம். அதனாலேயே இஸ்டப்பட்டு, கஸ்டப்பட்டு இந்த ஷோவுக்குள் நுழைந்துவிடுபவர்கள் அதிகம். இந்த ஷோவுக்குள் நுழைந்ததுமே அதிக விமர்சனங்களை எதிர்கொண்டவர் தான் அபிஷேக்.

பிக்பாஸ் இந்த சீசனில் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது ஒரு திருநங்கையும் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார். இதுபோக இமாம் அண்ணாச்சி தொடங்கி, தொகுப்பாளர் பிரியங்கா வரை மக்களுக்குப் பிடித்த பலரும் இந்த ஷோவில் இருக்கிறார்கள். இந்த முறை அவர்களில் ஒரு போட்டியாளராக அபிஷேக் ராஜாவும் இருக்கிறார். இவர் பிக்பாஸ் ஷோ குறித்து இதற்கு முன்பு கேலி செய்து பேசிய வீடியோ ஒன்று சிலதினங்களாக வைரல் ஆகியது.

அதில், ‘ஊருக்கேத் தெரியும் உங்கள கேமரா வைச்சு எடுத்துகிட்டு இருக்காங்கன்னு…ஆனா கிடைச்ச நூறு நாளுல தமிழ்நாடு சி.எம் ஆகணும்ன்னு நீ பண்ற வேலையெல்லாம் இருக்கே எனப் பேசியிருக்கிறார். இந்த வீடியோவை உலக நாயகன் கமல்ஹாசன் பார்க்கும்வரை ஷேர் செய்யுங்கள் என்னும் கேப்சனோடு இதை நெட்டிசன்கள் பகிர்ந்தனர். பார்க்கச் சின்னப் பையன் போல் இருக்கும் அபிஷேக்கிற்கு கல்யாணம் முடிந்துவிட்டது. தனது பேச்சு, சினிமா ரிவியூக்கள் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் ரீச் ஆனவர் அபிஷேக். அதிலும் சினிமா பிரபலங்களை வெரைட்டியாக பேட்டி எடுத்து பேமஸ் ஆனவர்.

சில நேரங்களில் இவர் வியூஸ்க்காக செலிபிரேட்டிகளை பாடாய்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உண்டு. பார்க்க பொடியன் போல் இருக்கும் அபிஷேக்கிற்கு கல்யாணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. தீபா நடராஜன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்த இவர் இரண்டே வருடத்தில் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பான திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே இந்த பெண்ணும் பிரபலம் தானே எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published.