பிக்பாஸ் அபினய்யா இது? சென்னை 28 படத்தில் நடிச்சுருக்காரா? பலரும் பார்த்திராத புகைப் படம்..!

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. ஓவியா முதல் ரைசாவரை பலருக்கும் இதன் மூலம் படவாய்ப்புகள் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த ஷோ ஏற்கனவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசன் தொடங்கி விறு, விறுப்பாக நடந்து வருகிறது.

இந்த சீசனில் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது ஒரு திருநங்கையும் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார். இதுபோக இமாம் அண்ணாச்சி தொடங்கி, தொகுப்பாளர் பிரியங்கா வரை மக்களுக்குப் பிடித்த பலரும் இந்த ஷோவில் இருக்கிறார்கள். இந்த முறை அவர்களில் ஒரு போட்டியாளராக அபிநய்யும் இருக்கிறார். இந்த அபிநய் பழம் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் ஆவார். இவருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.

பிக்பாஸ் ஷோவைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனே ஜெமினி கணேசன் நடித்த களத்தூர் கண்ணம்மா படத்தில் தான் அறிமுகம் ஆனார். ஜெமினி கணேசனும், கமலும் சேர்ந்து நடித்த அவ்வை சண்முகி படமும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. கமல் பிக்பாஸ் ஷோவில் அபிநய்யை அறிமுகம் செய்த போதுகூட நான் அவருக்கு மாமா எனக் கூறினார். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ராமானுஜன் என்னும் படத்திலும் நடித்திருந்திருந்தார் அபிநய். கடந்த 2016 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கி மெகா ஹிட்டான சென்னை 28 படத்தில் வைபவின் தோழனாக நடித்திருக்கிறார் அபினய். இந்தப் படம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

pic 1

Leave a Comment

Your email address will not be published.