வீட்டில் துடைப்பத்தை இப்படி வைத்தால் உங்கள் பணம் பறிபோயிடும்.. எவ்வளவு சம்பாதிச்சாலும் பணம் தங்கலையா? காரணம் இதுதான்..!

சிலர் வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதித்துக் கொண்டே இருப்பார்கள். மாடாக உழைப்பார்கள். ஆனால் அவர்களிடம் பணம் தங்கவே செய்யாது. அதற்கு அவர்கள் வீட்டில் இருக்கும் துடைப்பமும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? இதோ நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். உங்களுக்காக இந்தப் பதிவு.

பணம், பொருள், செல்வம் என எது இல்லாத வீடு வேண்டுமானாலும் இருக்கும். ஆனால் துடைப்பம் இல்லாத வீடே இருக்காது. அந்த துடைப்பம் தான் பெண்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருள். எந்த ஒரு பெண்ணும் தன் வீடும், வாசலும் சுத்தமாக இருப்பதை விரும்புவாள். அதேநேரம் துடைப்பத்தை நாம் எப்படி வைக்கிறோம் என்பதும் முக்கியம்.

பொதுவாகவே துடைப்பத்தில் மகாலெட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம். பொதுவாகவே வீட்டில் பெண்கள் துடைப்பம் சீக்கிரம் தேய்ந்துவிடக் கூடாது என அதை தலைகீழாக வைப்பார்கள். அதாவது இதில் மெல்லிதான பெருக்கும்(கூட்டும் பகுதி) மேலே இருக்கும். இப்படி வைக்கவே கூடாது. இதனால் தரித்திரம் உண்டாவதோடு, வீட்டின் செல்வ செழிப்பும் குறையும். பொதுவாகவே வீட்டின் உள்பகுதியை கூட்ட ஒரு துடைப்பமும், வாசலைக் கூட்ட மற்றொரு துடைப்பமும் பயன்படுத்தவேண்டும். துடைப்பம் பல பயன்படுத்தினாலும் அனைத்தையும் ஒரே இடத்தில் போட்டு வைத்தால் ஒற்றுமை இருக்காது என்பதும் ஐதீகம். அது குடும்ப ஒற்றுமையைச் சிதைக்கும் வாய்ப்பு அதிகம்.

அதேபோல் துடைப்பம் தானே என நினைத்து அதை அசட்டையாக காலால் மிதிக்கக் கூடாது. அதில் முடி, நூல் என எதுவும் மாட்டியிருந்தாலும் கையால்தால் அகற்ற வேண்டும். துடைப்பத்தை படுக்கவைத்தால் வீட்டில் பொருளாதாரமும் படுத்துவிடும். வீட்டுக்கு வருவோர் கண்ணிலும் துடைப்பம் படக்கூடாது. இதையெல்லாம் பாளோ செய்தாலே துடைப்பத்தால் வரும் தரித்திரம் விலகும்.

அதேபோல் இரவு நேரத்தில் வீட்டைப் பெருக்கக் கூடாது. வீட்டில் இருந்து ஒருவர் வெளியே சென்றதும் உடனே பெருக்கக் கூடாது. வாஸ்துபடி துடைப்பத்தை நாம் மரியாதை செய்வது லெட்சுமி தேவிக்கு ரொம்பப் பிடிக்கும். மொட்டை மாடியில் துடைப்பத்தை வைத்தால் திருட்டு ஆபத்து ஏற்படும். திடீர் என குழந்தை துடைப்பத்தால் வீட்டைப் பெருக்கினால் வீட்டிற்கு விருந்தினர் வருவார் என அர்த்தம். இதையெல்லாம் செய்யாவிட்டால் உங்கள் வீட்டில் பாக்கெட்டில் பணம் இருக்காது. பர்ஸ் காலியாகிவிடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *