கருத்தம்மா படத்தில் நடித்த மகேஷ்வரியா இது? இப்போ ஆழே மாறி எப்படி இருக்காங்கன்னு பாருங்க…!

பாரதிராஜாவால் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்தம்மா படத்தில் நாயகனாக நடித்தவர் நடிகர் ராஜா. அவரது அழகான சிரித்த முகமும், சினேக பாவமும் கல்லூரி கண்மணிகளிடம் அவருக்கு நல்ல இமேஜை பெற்றுத்தந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. அதே படத்தின் மூலம் பிரபலமானவர்தான் மகேஸ்வரி.

தமிழ்,தெலுங்கு என இருதிரையுலகிலும் அசத்தினார். கருத்தம்மாவின் வெற்றிக்குப் பின்பு பாஞ்சாலங்குறிச்சி, நேசம், தல அஜித்தோடு உல்லாசம் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். கடந்த 2000 வரை சினிமாவில் கொடிகட்டிப்பறந்த இவர், அதன் பின்பு சீரியல் பக்கம் தலைகாட்டினார். அடிப்படையில் பேஷன் டிசைனரான இவர் நடிகையாக மாறினார்.

துவக்கத்தில் மயில் என செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீதேவிக்கு காஸ்ட்யூம் டிசைனராகவும் இருந்தார். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்புக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. அந்த விருது வாங்கச் சென்ற ஸ்ரீதேவிக்கான உடையை மகேஸ்வரி தான் தயார் செய்தார்.

2000 வரை சினிமாவில் கலக்கிய மகேஸ்வரியின் இப்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

 

Leave a Comment

Your email address will not be published.