சூப்பர் சிங்கர் ரோஷினியின் மகளா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே… புகைப்படம் பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டி, தொட்டியெல்லாம் பேமஸ் ஆனவர் தான் ரோஷினி. பொதுவாகவே இசைப் பிரியர்களுக்கான நிகழ்ச்சிகள் பெரிய அளவில் ஹிட் ஆகிவிடும். அந்த வரிசையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கருக்கு முக்கிய இடம் உண்டு.

இந்த தொடரில் வந்த பலரும் இப்போது சினிமாவில் பிண்ணனிப் பாடகர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் ரோஷினியும் இப்போது சினிமா இண்டஸ்ட்ரியில் செம பிஸி. சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் பாடல் ரோஷினி தான் பாடியிருந்தார்.

இப்போது தன் கணவர் ஜாக்குடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்வர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் கலந்து வருகிறார். அம்மணி அண்மையில் தன் கணவர் ஜாக்குடன் இணைந்து தன் செல்ல மகளின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே நம்ம ரோஷினிக்கு இவ்வளவு பெரிய மகளா என கமெண்ட் செய்துவருகின்றார்.

Leave a Comment

Your email address will not be published.