முன்பெல்லாம் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தார்கள். இப்போதெல்லாம் வீட்டுக்கு, வீடு டிவி பெட்டி இருப்பதால் சின்னத்திரை நடிகர்களும் அதற்கு இணையாக ரீச் ஆகிவிடுகிறார்கள். அதிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அந்த வகையில் விஜய் டிவியில் பிக்பாஸ்க்கு கடும்போட்டியாக இருப்பது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சிதான். நடிகர் அர்ஜூன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார். இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் காடர்கள், வேடர்கள் என இரு அணிகலாகப் பிரிக்கப்பட்டு இவர்களுக்கு சவால் கொடுக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பெசன்ட் ரவி கலந்துவருகிறார்.
பெசன்ட் ரவிக்கு வயது ஆகிவிட்டதால் அவரை எலிமினேட் செய்ய வேண்டும் என சக போட்டியாளர்கள் கருத்துச் சொல்லிவருகின்றனர். இதுகுறித்து பெசண்ட் ரவியின் மகள் ஸ்வேதா ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‘அப்பா சினிமாவில் வில்லனாக நடித்ததால் பலரும் நிஜத்திலும் அப்பா வில்லன் தான் என நினைக்கின்றனர். ஆனால் நிஜத்தில் என் அப்பா ஹீரோ மாதிரி. போட்டியாளர்கள் பலரும் என் அப்பாவுக்கு வயதாகிவிட்டது எனச் சொல்கிறார்கள். ஆனால் அப்பா மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
என்னோட அப்பா நிஜ வாழ்விலும் சர்வைவர் தான். ‘எனப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பெசண்ட் ரவியின் மகளின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.