சொகுசுக் கப்பலில் போதைப் பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரது மகனின் புகைப்படமே அதன் பின்பு தான் வெளியானது. இப்போது முதன் முறையாக நடிகர் ஷாருக்கானின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதில் அச்சு அசல் ஹீரோயின் போலவே இருக்கிறார் ஷாருக்கானின் மகள்.
பாலிவுட் பாட்ஷா என பெருமையோடு அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். தமிழில் தக, தைய்யத்தைய..தைய்யா பாடலுக்கும், லுங்கி டேன்ஸ் பாடலுக்கும் ஷாருக்கான் போட்ட ஆட்டம் இன்னும் கூட பேமஸ்தான். பெரிய புன்புலம் இன்றி டிவி சீரியல்களின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த ஷாருக்கான் இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகனாக உள்ளார். 1992ல் டர் என்னும் இந்தி படத்தில் முதலில் நெகட்டிவ் ரோல் செய்துதான் நடித்திருந்தார். தொடர்ந்து ஹீரோவாகக் கலக்கி வருகிறார். பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். இப்போது முதன் முதலாக ஷாருக்கானின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் போல் இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.
pic 1