பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. ஓவியா முதல் ரைசாவரை பலருக்கும் இதன் மூலம் படவாய்ப்புகள் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த ஷோ ஏற்கனவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசன் தொடங்கி விறு, விறுப்பாக நடந்து வருகிறது.
இந்த சீசனில் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது ஒரு திருநங்கையும் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார். இதுபோக இமாம் அண்ணாச்சி தொடங்கி, தொகுப்பாளர் பிரியங்கா வரை மக்களுக்குப் பிடித்த பலரும் இந்த ஷோவில் இருக்கிறார்கள். இந்த முறை அவர்களில் ஒரு போட்டியாளராக அபிஷேக் ராஜாவும் இருக்கிறார். இவர் பிக்பாஸ் ஷோ குறித்து இதற்கு முன்பு கேலி செய்து பேசிய வீடியோ ஒன்று இப்போது வைரல் ஆகிவருகிறது.
அதில், ‘ஊருக்கேத் தெரியும் உங்கள கேமரா வைச்சு எடுத்துகிட்டு இருக்காங்கன்னு…ஆனா கிடைச்ச நூறு நாளுல தமிழ்நாடு சி.எம் ஆகணும்ன்னு நீ பண்ற வேலையெல்லாம் இருக்கே எனப் பேசியிருக்கிறார். இந்த வீடியோவை உலக நாயகன் கமல்ஹாசன் பார்க்கும்வரை ஷேர் செய்யுங்கள் என்னும் கேப்சனோடு இதை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். கொஞ்சம், நஞ்சம் பேச்சாடா பேசுன என்பதைப் போல இதில் அபிசேக் ஓவராகப் பேசிவிட்டு அதே பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.