பிக்பாஸ் பவானி வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா? கேட்டாலே கண்ணீர் வரவைக்கும் சோகத்தை சுமக்கும் பவானி..

பிக்பாஸ் ஷோ 5 வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடந்துவருகிறது. பிக்பாஸ் ஷோவில் தலைகாட்டினால் எப்படியும் பிரபலம் ஆகிவிடலாம் என்னும் நம்பிக்கையே காரணம். பிக்பாஸ் ஷோ பலருக்கு நல்ல எதிர்காலத்தையும் கொடுத்திருக்கிறது.

இந்த ஷோவில் பவானி ரெட்டியும் இருக்கிறார். இவர் மனதுக்குள் ஆயிரம் சோகங்களை புதைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் அண்மையில் பேசியிருக்கிறார் அதில்,அவர் பிக்பாஸ் மேடையிலேயே சொல்லும்போது, ‘நான் பொதுவாகவே எந்த ஷோவுக்குப் போனாலும் ரிசர்வ்ட் ஆகத்தான் இருப்பேன். அந்த மூடை உடைக்க வேண்டும் என்றுதான் இந்த ஷோவுக்கு வந்தேன். நானும் நாட்டிதான். என்னிடம் கொஞ்சம் கோபமும் இருக்கிறது. அதை காட்டத்தான் இங்கே வந்தேன்.’எனச் சொல்கிறார்.

இன்னொரு வீடியோவில் அவர் மிகவும் எமஷோனலாக ‘என் பேரு பவானி. ஐதராபாத்தில் இருந்து வந்திருக்கேன். பெல்காமில் தான் பிறந்து வளர்ந்தேன் எனக்கு இரண்டு அக்காக்கள். மாடலிங் பீல்டில் இருந்து நடிகையாக வந்தேன். 23 வயதில் எல்லாரையும் போல் நானும் கல்யாணம் செய்துகொண்டேன். வேலைக்குப்போய் வரும் கணவருக்குச் சமைத்துப் போட வேண்டும் என ஆசைப்பட்டேன்.

திருமணம் முடிந்து லைப் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. ஆனால் கல்யாணம் முடிந்த இரண்டே மாசத்தில் என் கனவர் த ற் கொ லை செஞ்சுகிட்டாரு. எனக்கு அது பெரிய இ ழ ப் பு. அந்த வலியோடு தான் இப்போதுவரை வாழ்ந்து வருகிறேன். மேரேஜ் லைப் எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. இப்போதும் என் வீட்டுக்காரர் குடும்பமே எனக்குப் பெரிய சப்போர்ட்.’’என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *