ராட்சசன் படத்தில் வந்த சைக்கோ கில்லர் நிஜத்தில் யார் தெரியுமா? அடடே இவரும் பிரபல நடிகர் தான்!

அண்மைக்காலமாக வந்த திரைப்படங்களில் மெகா ஹிட் ஆன திரைப்படம் ராட்சசன். பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் விஷ்ணு விஷால், அமலாபால் நடித்த ராட்சசன் வசூல், விமர்சனரீதியாக பெறும் வெற்றி பெற்றது.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் என தன் வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து ஸ்கோர் செய்பவர் விஷ்ணு விஷால். தன் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழுவிலேயே கவனிக்க வைத்தவர் தொடர்ந்து அதேபோல் மாறுபட்ட கதைகளையே தேர்ந்தெடுத்த வகையில் தனக்கென தனி இடம் பிடித்தவர். இவர் நடித்த ராட்சசன் திரைப்படம் பிளாஸ் பஸ்டர் ஹிட் அடித்தது. ராட்சசன் படத்தை ராம்குமார் இயக்கி இருந்தார். இவர் இதே விஷ்ணு விசாலை வைத்து முண்டாசுப்பட்டி என்னும் படத்தையும் எடுத்திருந்தார். அதுவும் ஹிட் அடித்தது.

ராட்சசன் படத்தில் வயோதிக தோற்றத்தில் முகமெல்லாம் சுருங்கி கில்லராக நடித்திருந்த கிறிஸ்டோபர் என்னும் பாத்திரம் ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தில் கிறிஸ்டோபராக நடித்தவரின் நிஜப்பெயர் சரவணன். நிஜத்தில் இவர் பரமசாதுவாம். இவரது குடும்பப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic 1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *