சூர்யா, ஜோதிகா தம்பதியின் ரீல் மகளா இது? ஹீரோயின் மாதிரி நச்சுன்னு இருக்காரே…இதோ நீங்களே பாருங்கள்…

தமிழ்த்திரையுலகில் நடிகர்_நடிகைகள் காதலித்து திருமணம் செய்வது புதிய விசயம் இல்லை. என்.எஸ்.கிருஷ்ணன்_மதுரம் காலத்தில் இருந்தே இதை வகைப்படுத்தலாம். ஜெமினி கணேசன்_சாவித்ரியும் நட்சத்திர ஜோடியாக அன்று வலம்வந்தனர்.

ஏன் அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித்_ஷாலினியை காதலித்தே கல்யாணம் செய்தார். அதேபோல் தமிழ்த்திரையுலகில் சூர்யா_ஜோதிகா காதல் ஜோடியும் பேமஸ். கடந்த 2006ல் நடந்த தன் திருமணத்துக்கு பின்பு சினிமாவில் நடிப்பதற்கு முழுக்குப் போட்டார் ஜோதிகா. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்பு 36 வயதினிலே திரைப்படம் மூலம் ரீ எண்ட்ரி ஆனர் ஜோதிகா.

தொடர்ந்து இப்போது பெண்களை மையப்பாத்திரமாகக் கொண்டுவரும் படங்களில் நாயகியாக வேடம் கட்டுகிறார் ஜோதிகா. இந்த லாக்டவுண் நேரத்திலும் கூட ஓடிடி தளத்தில் ஜோதிகா நடித்த படம் வெளியானது. ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் சூர்யா, இப்போது சூரரைப் போற்று படத்தில் நடித்திருந்தார். இது ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்போது ஜோதிகா_சூர்யா தம்பதியின் மகள் தியா, ஜோதிகாவின் உயரத்துக்கு வளர்ந்துவிட்டார். சூர்யா, ஜோதிகா இருவருமே திரையுலகப் பிண்ணனி கொண்ட குடும்பம் என்பதால் இவர்கள் பாணியில் தியாவும் நடிக்க வருவாரா என இப்போதே ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் தியாவுக்கு படிப்பில் தான் இப்போது நாட்டம் அதிகமாம். படிப்பு முடிந்து என்ன பணிசெய்வது என அவரே முடிவெடுப்பார் எனவும் சூர்யா_ஜோதிகா கூறிவருகிறார்களாம். அதேநேரத்தில் இப்போது ஜோதிகா, சூர்யா தம்பதியின் ரீல் மகளும் வளர்ந்து விட்டார். நச்சென ஹீரோயின் போல் இருக்கிறார்.

சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோர் நடித்த சில்லுன்னு ஒரு ஆதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் ஸ்ரேயா சர்மா. இவர் தொடர்ந்து எந்திரன் படத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டினார். அம்மணி இப்போது தெலுங்குத் திரையுலகில் ஹீரோயினாக நடித்துவருகிறார். அம்மணி இப்போது சில பிரத்யேக போட்டோசூட்களை நடத்தி வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் சீக்கிரமே தமிழிலும் ஹீரோயினாக நடியுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Leave a Comment

Your email address will not be published.