தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் கமல் ஹாசன். திரைப்படக் காட்சிகளுக்காக எந்த ரிஸ்கும் அவர் எடுப்பதால் தான் அவரை உலக நாயகன் என அனைவரும் கொண்டாடுகின்றனர். இதேபோல் களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன கமல் ஹாசன் இன்று தமிழ்த்திரையுலகில் நடிப்பு ஆளுமையாக இருக்கிறார்.
இதேபோல் தமிழ்த்திரையுலகில் தன் தேர்ந்த நடிப்பால் அதிகளவு ரசிகர்களைக் கொண்டவர் அஜித்.
தல அஜித்குமாருக்கு திரையுலகில் மட்டுமல்ல…வெளியிலும் மிகுந்த நல்ல பெயர் உண்டு. மிகச்சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, இன்று திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருக்கிறார்.
அஜித்குமார் தான் திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே தனது ரசிகர் மன்றங்களைக் களைத்தவர். நமக்குத் தொழில் நடிப்பு, ரசிகர்கள் தனக்காக தங்கள் பொன்னான நேரத்தையும், குடும்பத்தையும் மிஸ் செய்யக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தார் அஜித். இதேபோல் அஜித்தை பார்க்க வேண்டுமென்றால் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். தன் படம் சார்ந்த நிகழ்வு துவங்கி, எந்த பொதுநிகழ்விலும் கூட தல அஜித் தலை காட்டுவதில்லை. தல தரிசனத்திற்காக அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
கமல்ஹாசன் நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தான் விருமாண்டி. இந்தப் படத்திற்கு முதலில் சண்டியர் என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அந்தத் தலைப்புக்கு எதிர்ப்புக் கிளம்பவே படத்தின் பெயரை விருமாண்டி என மாற்றினார்கள். கமல் ஹாசனின் விருமாண்டி பட சூட்டிங் நடந்துகொண்டிருந்த போது, பக்கத்து செட்டில் தல அஜித்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது உணவு இடைவேளையின் போது அஜித், கமல்ஹாசன் நடிக்கும் காட்சியைப் பார்க்க போயிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.