போட்டின்னா இப்படித்தான் இருக்கணும்.. நம்மூரு மேளக் கலைஞர்களின் திறமையைப் பாருங்க..

இசைக்கு மயங்காதவர் யாரும் இல்லை எனச் சொல்வார்கள். இப்போது அதை மெய்ப்பிக்கும்வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இசை என்றாலே அனைவருக்கும் கொள்ளைப் பிரியம் தான். இவ்வளவு ஏன் பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். அந்த பாம்பே கூட மகுடி இசைக்கு மயங்கி வலையில் சிக்குவதைப் பார்த்திருப்போம். அந்த அளவுக்கு இசை வாழ்வோடு இரண்டறக் கலந்தது. இசைக்கு மொழியே கிடையாது. எந்த ஒரு இசையையும் மொழிகடந்து நாம் வெகுவாக ரசிக்கலாம். இங்கேயும் அப்படித்தான் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.

என்னதான் மேற்கத்திய இசைகள் பல இன்று இங்கு வழக்கில் இருந்தாலும் நம் பாரம்பர்யமான இசைக்கு இணை என எதையுமே சொல்லிவிட முடியாது. அந்தவகையில் இப்போது ஒரு மேளம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. கோயில் திருவிழா ஒன்றிற்கு நையாண்டி மேளம் புக் செய்து இருந்தனர்.

அந்த நிகழ்வுக்கு வந்திருந்த இரு மேளக்கலைஞர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு மேளம் வாசித்தனர். அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா என வடிவேலு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் கேட்பதைப் போல இதில் அடி வெளுத்து வாங்குகிறார்கள். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.

Leave a Comment

Your email address will not be published.