குப்பை வண்டியில் வந்த கல்யாணப் பொண்ணு… இப்படி ஒரு மணமகள் ஊர்வலத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க…

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

 

சில திருமணங்களில் மணமக்களின் நண்பர்கள் மேடையில் ஏறி நடனத்தில் பட்டையைக் கிளப்பி விடுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் திருமணத்தில் மணமக்களே ஆடி அசத்தி விடுவார்கள். இங்கே அதையெல்லாம் ஓவர்டேக் செய்வது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா?

ராணுவ வீரர் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. பொதுவாகவே மணமக்கள் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ராணுவ வீரர் அப்படிச் செய்யவில்லை. அவரது மனைவியை குப்பை வண்டி ஒன்றினை அலங்கரித்து அதில் அமர்த்தி அவரே தள்ளிக்கொண்டு போய் திருமண அரங்கை அடைந்தார். இந்த ரக வாகனத்தை குப்பைகளை அள்ளிபோடவும், வீடுகளுக்கு கல், மண், ஐல்லிகளை எடுத்துச் செல்லவும் பயன்படுத்துவார்கள். தன் திருமணத்தை வித்தியாசமாக செய்ய முயற்சித்த மாப்பிள்ளை இப்படி நூதனமாக செய்து அசத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Leave a Comment

Your email address will not be published.