இந்த குழந்தை யாருன்னு தெரியுதா..அம்மணி இப்போ பிரபல நடிகை பிரபல நடிகரின் மனைவியும் கூட…

தமிழ்த்திரையுலகில் ஒரு வீட்டில் ஒரு பிரபலம் இருந்தாலே அல்லோலப்படும். இந்த வீட்டில் கணவன், மனைவி இருவருமே பிரபலம் தான். சரி இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தமிழ்த்திரையுலகில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்த நடிப்புக்கு சொந்தக்காரர் பாபி சிம்ஹா. காதலில் சொதப்புவது எப்படி படத்தில் சின்ன ரோல் செய்திருந்தார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும் படங்களிலும் சின்ன, சின்ன ரோல் வாய்த்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா திரைப்படம் படத்தில் ஹீரோவாக நடித்த சித்தார்த்தை விட, எதிர்மறை கேரக்டரில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு மிகவும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.

இவரது மனைவிதான் ரேஷ்மி மேனன். இவரும் நடிகை தான். கடந்த 2002 ஆம் ஆண்டு தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஹீரோயினாக நடித்து வெளியான ஆல்பம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார். அதேபோல் ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக ரேஷ்மி மேனன் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து இனிது இனிது என்னும் படட்தில் ஹீரோயினாக நடித்து 2010 ஆம் ஆண்டில் அந்தப் படம் வெளியானது. ‘உறுதி’ என்னும் படத்தில் பாபி சிம்ஹாவோடு சேர்ந்து நடித்த ரேஷ்மி மேனன் அவரையே திருமணமும் செய்துகொண்டார். இப்போது ரேஷ்மி மேனனின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published.